tamilnadu

img

ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவம், அணு ஆயுதங்களை ஏந்தி கொண்டு, 1,500 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க கூடிய ஷஹீன் -2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. 

இது குறித்து, பாகிஸ்தானின் ஐஎஸ்பிஆர் அமைப்பின் கூறுகையில், ஷஹீன் -2 ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த ஷஹீன்-2 ரக ஏவுகணையும், ஹதீப்- 6 என்ற ஏவுகணையையும் வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தான் விஞ்ஞானிகள், ரகசிய இடம் ஒன்றில் சோதித்துப் பார்த்துள்ளனர். 

இதையடுத்து இன்று ஷஹீன் -2 ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது. அரபிக் கடல் பகுதியில் இந்த ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. டைரக்டர் ஜெனரல் மூலோபாய திட்டமிடல் பிரிவு, தளபதி இராணுவ மூலோபாய படைகள் கட்டளை, நெஸ்காம் தலைவர், இராணுவ மூலோபாயப் படைகளின் மூத்த அதிகாரிகள், மூலோபாய அமைப்புகளின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. 


;