tamilnadu

img

சிலியின் கவிக்குயில் பாப்லோ நெரூடா - காலத்தை வென்றவர்கள்

பாப்லோ  நெரூடா எனும் மாபெரும் கவிஞர்  சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருப தாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவி ஞர்களில் ஒருவர். கவிஞராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர்.

1953ஆம் ஆண்டு லெனின் அமைதிப் பரிசைப் பெற்றவர். 1971ஆம் ஆண்டு இலக்கியத் திற்கான நோபல் பரிசை வென்றவர். 1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெரூடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெரூடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் என்பதன் வடிவமாகும்.

தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெரூடாவும் “பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான்” என்று பாடியவர். 1964ஆம் ஆண்டு பிரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சாத்தர் நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த  ஆண்டு பாப்லோ நெரூடாவிற்குப் பரிசு கொடுத்தி ருக்க வேண்டும் என்பது. 1971ஆம் ஆண்டு பாப்லோ நெரூடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. “இருபதாம் நூற்றாண்டின் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே” என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெரூடாவைப் புகழ்கின்றார். 

பெரணமல்லூர் சேகரன்

;