tamilnadu

img

மாவீரன் உத்தம் சிங் நினைவுநாள்

மாவீரன் பகத்சிங்கை போலவே, ஜாலியன் வாலாபாக் படுகொலை யைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமான வர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றி ருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகச் சேர்ந்தான். தகுந்த தருணத் திற்காக காத்திருந்தான். பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலை யில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான். இலண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.  உத்தம்சிங்கை ‘சாகும்வரை தூக்கில் போடவேண்டும்’ என்று தீர்ப்பெழுதிப் பேனாவை முறித்தார் வெள்ளைக்கார நீதிபதி ஹட்கின்ஸன். நீதிமன்றத்திலிருந்து உடனே அவரை இழுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டார். 

லண்டனில் உள்ள பென்டோவில் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த உத்தம்சிங்  1940 ஆம் ஆண்டில் ஜூலை 31 அன்று தூக்கிலிடப்பட்டார். அவரது உடல்  சிறை வளாகத்தில் புதைக்கப் பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தம் சிங்கின்  உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியா தையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக் கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது. பகத்சிங், உத்தம்சிங் போன் றோரின் கனவான எல்லார்க்கும் எல் லாமும் கிடைக்கும் இந்தியாவாக மாற சகலபகுதி உழைக் கும் மக்களும் சுரண் டலுக்கு எதிரான  ஒன்றுபட்ட போரில் கரம் கோர்த்து சமூக மாற்றக் கருவிகளாக மாறவேண்டியது காலத்தின் அவசியம்.

பெரணமல்லூர் சேகரன்

;