tamilnadu

img

பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு பணியில் பெண் வீரர்கள்..

பாகிஸ்தான் எல்லைகட்டுப்பாட்டு பகுதிகளில், முதல் முறையாக பெண் ராணுவ வீரர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதல் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில், நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கேப்டன் குர்சிம்ரன் கவுர் தலைமையில் மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

குர்சிம்ரன் கவுர், அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை ராணுவ அதிகாரியாகும்.  மேலும், எல்லைப் பகுதியில், காம்பேக்ட் டியூட்டி எனப்படும் இதுபோன்ற பணிகளுக்கு பெண் ராணுவ வீரர்களை நியமிப்பது இதுதான் முதல் முறையாகும்.

நன்மை...

அங்குள்ள காஷ்மீர் மக்களுடன் குறிப்பாக பெண்களுடன், அவர்கள் எளிதாக நட்புறவை பேண முடிகிறது. மக்களிடம் எளிதாக கலந்து பேச முடிகிறது. ராணுவ வீரர்கள் என்றாலே பொதுவாக ஒரு அச்சம் மக்களிடம் இருக்கும். ஆனால் பெண் ராணுவ வீரர்களிடம் அச்சத்தை தாண்டி கனிவு காணப்படுகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.  

ஆயுத கடத்தல்,ராணுவ ஆயுதங்கள் போன்ற தகவல்களை  இவர்கள் மக்களோடு பழகி எளிதாக பெற முடிகிறது. முக்கியமாக உள்ளூர் பெண்கள் மூலமாக இந்த ராணுவ அதிகாரிகள் எளிதில் தகவல்களை பெற முடிகிறது, என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

;