மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அத்துடன் மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை யில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்துமாறு, நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி சிறிசேனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.