tamilnadu

img

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா... 

பாரீஸ் 
ஐரோப்பா கண்டத்தின் வளமிக்க நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் மார்ச் 2-ஆம் வாரத்தில் கொரோனா எழுச்சி பெற்றது. சுமார் 2 மாதங்கள் அந்நாட்டை கொரோனா புரட்டியெடுத்தது. அதன்பிறகு மே 2-ஆம் வாரத்தில் கொரோனா பரவல் தாக்கம் சற்று குறைய தொடங்கிய பின் தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்தது. இதனால் அங்கு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்நிலையில் ஜூலை 3-ஆம் வாரத்தில் இருந்து பிரான்சில் கொரோனா பரவல்  மீண்டும் தலைதூக்கியது. தினசரி பாதிப்பு கடந்த ஒருவாரமாக 800-க்கு மேல் இருந்த நிலையில், 2-வது அலையின் புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில்  1,130 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.80 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 10 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது. 80,815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.    

ஐரோப்பா கண்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையை தொடங்கியுள்ளது போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. அக்கண்டத்தில் உள்ள ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய பல நாடுகளில் தினசரி பாதிப்பு பரவலாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;