tamilnadu

img

மீன்கள் டோர் டெலிவரி

வேலூர், ஏப்.16- தமிழகத்திலேய முதல் முறையாக வேலூர்  மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் டோர் டெலிவரி என்ற விற்பனை முறை  நடைமுறைக்கு வருகிறது. ஊரடங்கு உத்தரவையொட்டி வேலூர் மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளை யும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  மே 3 ஆம் தேதி  வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள் ளதால் வேலூர்  மாவட்ட அனைத்து இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தங்களது விற்பனையை தொடர்வ தற்கு அனுமதி கேட்டனர்.

மேலும் அவர்கள், அவ்வாறு விற்பனை செய்  யும் பொழுது எக்காரணம் கொண்டும் கடைகளில்  இறைச்சி மற்றும் மீன் விற்பனை நடத்தப்படாது என்றும் வாடிக்கையாளர் களின் வீடுகளுக்கே ஆர்ட ரின் பேரில் நேரடியாக சென்று விற்பனை செய்யப்ப டும் எனவும், இதனை மீறி செயல்படும் கடைகளின்  மீது மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றும் தெரிவித்தனர். அதனை ஏற்று  வேலூர் மாவட்டத்தில் அனைத்து இறைச்சி மற்றும் மீன் விற்பனைகள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று கொடுக்கும்  டோர்டெலிவரி  விற்பனை முறை ஏப்ரல் 16 முதல்  நடைமுறைக்கு வந்தது.

இந்த கடைகள் தினமும் காலை 7 மணி முதல்  மதியம் 2 மணி வரை மட்டுமே ஆர்டரின் பேரில்  வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும்.  இந்த கால நேரத்தினை அவர்கள் தவறாமல் பின்  பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொரு வியா பாரியிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர்  செய்து தங்களது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும்.

;