திஸ்பூர், ஏப்.10-அசாம் மாநிலம், பிஷ்வாந்த் மாவட்டம் மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியில் பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வந்தவர் சவுகத் அலி (68).இந்நிலையில், மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்ததாக கூறி, இரண்டு நாட்களுக்கு முன்பு சவுகத் அலியை, பசு குண்டர்கள் கொடூரமாக தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.