tamilnadu

img

அண்டார்ட்டிக்காவில் வரலாறு காணாத வெப்பம் - அர்ஜெண்டினா ஆராய்ச்சி நிலையம் தகவல்

அண்டார்ட்டிகாவின் அதிகபட்ச வெப்பமான வெப்பநிலையாக 18.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாக அர்ஜெண்டினாவின் ஆராய்ச்சி நிலையம்  தகவல் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்காவை நோக்கி செல்லும் அண்டார்ட்டிகாவின் தீபகற்ப பகுதி பூமியின் மிக விரைவான எச்சரிக்கை இடங்களில் ஒன்றாகும்.  உலக வானிலை அமைப்பின் தகவலின்படி, இது கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3°C அதிகமாக வெப்பமடைந்திருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட அனைத்து பிராந்தியத்தின் பனிப்பாறைகளும் உருகும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அண்டார்ட்டிகாவில் அதிகபட்ச வெப்பமான வெப்பநிலையாக 18.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது முந்தைய வெப்பமான வெப்பநிலை பதிவை விட 0.8°C அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் 2015-ஆம் ஆண்டு, கண்டத்தின் தீபகற்பத்தின் வடக்கு முனையில் உள்ள எஸ்பெரான்சாவில் எடுக்கப்பட்ட அளவின்படி அண்டார்டிகாவின் முந்தைய அதிகபட்ச வெப்பநிலையாக 17.5°C பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.