tamilnadu

img

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை

ஐ.நா.சபை, செப்.25- அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை எனப் பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ ஐ.நா சபையில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது  இத் தகவலைத் தெரிவித்தார். “அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வ தேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ள லாம்” என்றும் கூறினார். அத்துடன் அமே சான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரி தல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் குதர்க்க வாதம் செய்கிறார்கள் என்றார்.  “அமேசான் மனித குலத்தின் பொக்கி ஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ் வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது” என்றும் கூறினார்.  பொல்சனாரூ அரசு அமேசான் காட்டை பாதுகாக்கத் தவறிவிட்டது. காடழிப்பை ஊக்குவிக்கிறது என சூழலியலாளர்கள் குற்றம்சாட்டி வரும் சூழலில் அவர் இவ்வாறு உரையாற்றி உள்ளார். அத்துடன் சர்வதேச ஊடகங்களையும் பொல்சனாரூ ஐ.நாவில் குற்றஞ்சாட்டினார்.

“பரபரப்பான செய்தி தருவதற்காகப் பொய்யான செய்திகளைச் சர்வதேச ஊடகங் கள் தந்துவிட்டன. எங்களுக்கு உதவுவ தற்குப் பதிலாக, ஊடகங்களின் இந்த புரட்டுகளை எடுத்துக் கொண்டு காலனித்துவ மனநிலை யில் சில நாடுகள் நடந்து கொண்டன” என்றும் அவர் கூறினார். பூர்வகுடிகளை தம் அரசு சரியாக நடத்து வதாகவும் சயீர் பொல்சனாரூ குறிப்பிட்டார். பிரேசில் உள்ளேயும், வெளியேயும் உள்ள சிலர், பிரேசலிய இந்தியர்களைக் குகை மனி தர்களாகவே கருதுகிறார்கள். அந்த நிலை யிலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறார் கள்” என்றார்.சில அந்நிய சக்திகள் தங்கள் சொந்த நலனுக்காக பூர்வகுடி தலைவர்க ளைத் தவறாக வழிநடத்துகின்றன என்றார். பருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா தன்பெர்க் உரையாற்றிய சில மணி நேரங்க ளுக்கு பின்புதான் பொல்சனாரூ இவ்வாறா கப் பேசி உள்ளார்.கிரேட்டா தனது உரை யில், “அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கி றோம்.ஆனால், பணம் குறித்து... நித்திய மான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டி ருக்கிறீர்கள்.”என்று குறிப்பிட்டு இருந்தார். பொல்சனாரூ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நகரத்தில் பல்வேறு போராட்டங்களை சூழலியலாளர்கள் மேற் கொண்டனர்.

;