அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அங்கராயநல்லூர் ஊராட்சியில் சாலை ஓரம் குடிநீருக்காக வெட்டப்பட்டிருந்த கிணறு பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ளது என தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஜெயங்கொண்டம் ஒன்றிய ஆணையர், அந்த கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அங்கராயநல்லூர் ஊராட்சி சார்பில் பணிகள் நடைபெறுகின்றன.