அரியலூர், டிச.19- அரியலூரில் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் தொகுதி வார்டு நம்பர் பதினைந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுதா புனிதன் அறிமுக கூட்டம் திருமானூர் சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆர்.புனிதன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன் தலைமை ஏற்றார். மாநில குழு உறுப்பினர் எம் சின்னதுரை வேட்பாளர் அறிமுகப்படுத்தினார். திமுக மாவட்ட துணை செயலாளர் என்.தனபால், திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கென்னடி, கிழக்கு ஒன்றிய செய லாளர் அசோக சக்கரவர்த்தி, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி பொறுப்பா ளர் சி. மாரியம்மாள், வட்டார துணை தலைவர் சிவராமன் மூப்பனார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தொகுதி பொறுப்பா ளர் செல்ல பாலமுருகன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.சபரிராஜன், மலர்கொடி, மாதர் சங்கம் பாக்கியம், ஒன்றியக்குழு மணியன் ஏசுதாஸ் எஸ்.பி.சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்ட ஏழாவது வார்டு வேட்பாளர் பொறுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளை செயலா ளர் ரமேஷ் துணைவியார் அகிலா, கூட்டணிக் கட்சியான திமுக ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாஜலம் மற்றும் தோழமை கட்சி உறுப்பினர்களுடன் திமுக ஒன்றிய செயலாளர் மனிமாறனை சந்தித்தினர்.