tamilnadu

ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைத்திடக் கோரிக்கை

அரியலூர், பிப்.11-  அரியலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அளித்த தமிழக அரசுக்கு விவசாயி கள் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள் கிறது.  ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள தொழிற் சாலைகள், தொழில் மையங்கள், அரசு கல்லூரிகள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கு எந்தவித ஏற்பாடு களை இதுவரை எந்த அரசும் செய்ய வில்லை. முன்னேற்றம் இல்லாத பகுதியாக உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் மக்க ளில் 85 சதவீதத்திற்கும் மேல் வறுமைக் கோட்டுக்குள் உள்ளார்கள். பல ஆயிரத்திற் கும் மேற்பட்ட பட்டதாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், மற்ற வெவ் வேறு துறைகளில் படித்து பட்டம் பெற்று வேலை தேடும் அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ள வாலிபர்களின் நலன் கருதி அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும். தற்போது ஜெயங்கொண்டம் பகுதியில் விவசாயம் முழுக்க முழுக்க பல்வேறு கார ணங்களால் நலிவுற்ற நிலையை அடைந் துள்ளது. அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை ஜெயங்கொண்டம் பகுதியில் அமைத்தால் இங்கிருக்கும் மக்கள் பயன் பெற ஏதுவாக இருக்கும். இங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரம் அலையாமல் அருகி லுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவார்கள். ஜெயங்கொண்டம் ஒன்றியம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சூழலில் உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர், ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவ கல்லூரி அமைவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என விவசாயி கள் சங்க அரியலூர் மாவட்டச் செயலாளர் கே.மகாராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

;