tamilnadu

img

கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி...

அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள் வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆய்வு செய் துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங் கொண்டம் அருகே உள்ளது கங்கை கொண்ட சோழபுரம். சோழப் பேரரசன் ராஜேந்திரன் காலத்தில் குமரியிலிருந்து கங்கை நதி வரையிலான நிலப் பரப்புகள் மட்டுமல்லாமல் கீழை நாடுகளான இலங்கை, சிங்கப் பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் அனைத்துக்கும் தலைநகராக இருந்த பெருமை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு உண்டு. பிற்கால சோழர் சரித்திரத்தில் 250 ஆண்டுகளுக்கு மேல் சோழ வேந்தர்களின் தலைநகராகக் கோலோச்சியது கங்கைகொண்ட சோழபுரம்.

ஆனால், காலசுழற்சியில் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த மாட, மாளிகைகள் அனைத்தும் அழிந்து விட, ராஜேந்திரனின் கங்கைப் படையெடுப்பின் வெற்றியைப் பறைசாற்றும் கங்கைகொண்ட சோழீச் சரம் திருக்கோயில் மற்றும் சோழகங்கம் எனும் பேரேரி மட்டுமே எஞ்சியுள்ளன.சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் மாளிகைகள் இருந்த இடம் அழிந்து போய் விட்டன. இப்போது அந்த பகுதிய ‘மாளிகைமேடு’ என்று அழைக்கப் படுகிறது.கீழடி, ஆதிச்சநல்லூர் உள் ளிட்ட பகுதிகளில் விரிவான அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப் படுவதைப் போல கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டிலும் உரிய அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரனும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.மாளிகை மேட்டில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்பட்சத்தில் சோழர் காலத்தில் தமிழர் கொண் டிருந்த பண்பாட்டு, கலாச்சார தொன்மை உலகுக்குத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;