ஜெயங்கொண்டம், ஆக.18- ஜெயங்கொண்டம் திருவள்ளுவர் ஞான மன்றம் இலக்கிய அணி, யுனிவர்ஸ் அல்மைட்டி டிவைன் பவர் பவுண்டேசன், வாசவி கிளப் சார்பில் அரியலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ச் செம்மல் செயராமன் தலைமை தாங்கினார். மணி, இராவணன், இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ50,000 மதிப்பிலான பரிசு பொருட்களை பிரபஞ்ச தெய்வீகப் பேராற்றல் அறக்கட்டளை தலைவர் த.முத்துக்குமரன் வழங்கினார். மேலும் நூலாய்வு குறளாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வெங்கடேசனின் வானம் தொடும் ஏணிகள் நூல் ஆய்வு செய்யப்பட்டது. உலக திருக்குறள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆதிலிங்கம், கண்ணதாசன், சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக செயலர் சதாசிவம் வரவேற்றார். நிறுவனர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.