tamilnadu

img

ட்விட்டரில் ட்ரெண்டான 'How Dare You'

டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் 16 வயது சிறுமி கேட்ட 'How Dare You' என்ற கேள்வி இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக போராட்டி வருகிறார் சுவீடன் நாட்டு மாணவி கிரெட்டா தன்பெர்க். இவர் பருவ நிலை மாற்றத்தின் பாதிப்பு களை வெளிகொண்டு பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லவில்லை என்ற போராட்டத்தை முன்னெடுத்தார், இந்நிலையில் நேற்று ஐ.நாவில் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். 
 கிரெட்டா பேசியதாவது, இளைய சமுதாயம் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. வளி மண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி கடும் கோபத்துடன்  குற்றம் சாட்டினார். மேலும் "உலகின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம் பற்றியும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விசித்திரக் கதைகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?," என உலக நாடுகளின் தலைவர்களை நோக்கிக் கண்ணீர் மல்க கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும், காலநிலை மாற்றத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தார். 
இந்நிலையில் ஐநாவில் கிரெட்டா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் உலக தலைவர்களை பார்த்து ஆங்கிலத்தில் ' how dare you' என்று கேள்வி எழுப்பியது தற்போது இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. கிரெட்டாவிற்கு ஆதரவாக வலைதளவாசிகள் #howdareyou என்ற ஹேஸ்டேக்கின் மூலம் பலரும் கிரேட்டாவிற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 
 

;