tamilnadu

img

நிறவெறி கிரிக்கெட்டிலும் உண்டு - கிரிஸ் கெயில்

கருப்பின மக்களின் வாழ்வாதார உரிமைக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நிறவெறி கால்பந்து மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் உள்ளது என்று கிரிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு, முழங்காலால்  அழுத்தப்பட்டு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதிகேட்டு  அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிரிஸ் கெயில் கூறியதாவது:- “நான் உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளேன். நிறவெறி தொடர்பான பிரச்சினைகளையும் பல இடங்களில் சந்தித்துள்ளேன். நான் உண்மையாகவே சொல்கிறேன். நிறவெறிப் பிரச்சினை இன்னும் பல இடங்களில் தொடரத்தான் செய்கிறது.இந்த நிறவெறி வேறுபாடு கிரிக்கெட்டிலும் இருக்கவே செய்கிறது. மேலும் கால்பந்து உள்ளிட்ட பலவற்றிலும் தொடர்கிறது.  ஒரு அணிக்கு உள்ளேயே பாகுபாடு பார்க்கப்படுகிறது. நானும் கருப்பினத்தைச் சேர்ந்தவன்தான். கருப்பு என்பது சக்தி வாய்ந்தது. கருப்பராக இருப்பதில் பெருமையடைகிறேன்” என்றார். 


 

;