tamilnadu

img

அமெரிக்கர்கள் உடனடியாக ஈராக்கை விட்டு வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் உத்தரவு

அமெரிக்கா ஈராக்கில் நடத்திய தாக்குதலை அடுத்து அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்களை  உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வாரம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது அமெரிக்கா உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையத்தில், அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசிம் சுலைமானி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. 
 

;