tamilnadu

img

8000 ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு

அபுதாபியில் 8000 ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மாறா தீவில் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வுகளில் கற்காலத்தைச்சேர்ந்த கற்சிற்பங்கள் பீங்கான் பொருட்கள் ஓடு மற்றும் கற்களால் ஆன மணிகள் பல கிடைத்துள்ளன. இதில் மிகப்பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத்தது. இந்த முத்து கி.மு 5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது. இது கற்காலத்தின் கடைசி பகுதியைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அபுதாபி முத்து என பெயரிட்டு உள்ளனர். இது அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் 30ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
 

;