குவாஹத்தி:
பாஜக முதல்வருக்கு எதிராக, சமூகவலைத்தளங்க்ளில் அவதூறு பரப்பிய விவகாரத்தில், பாஜக சமூகவலைத்தளப் பிரிவினரே சிக்கி கைதாகியுள்ளனர்.அசாமில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சர்பானந்த சோனாவால் முதல்வராக இருந்து வருகிறது. இந்நிலையில், சோனாவாலை மோசமாக விமர்சித்து, பாஜகவின் சமூகவலைத்தளப் பிரிவைச் சேர்ந்த நிதுமோனி போரா, நானி கோபால் டுட்டா என்பவர்கள் பதிவு வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் போரா, மத்திய அசாமின் மோரிகவோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோபால் டுட்டா, முதல்வர் சர்பானந்த சோனாவாலின் மஜூலி தொகுதியைச் சேர்ந்தவர்..இந்நிலையில், சோனாவால் குறித்து போரா, டுட்டா ஆகியோர் வெளியிட்ட அவதூறு கருத்துக்கள் தொடர்பாக, ராஜூ மஹந்தா என்பவர் காவல்துறையில் புகார் அளிக்கவே, போரா, டுட்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மற்றொரு பாஜக-காரரான ஹேமந்தா பருவா என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது, அவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.