tamilnadu

img

அசாம் இருதரப்பினரிடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு


அசாமில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஏராளமான வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். மோதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி கூறுகையில், இரு வேறு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்ததால், பாதுகாப்புக்காக ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலுக்கு முன்பு சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். பள்ளிவாசலுக்கு முன்பு அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மோதல், வன்முறையாக மாறி, கலவரமாக வெடித்தது. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது” என்றார் அவர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை



;