tamilnadu

img

குஜராத் பாஜக அரசின் ‘போலி வெண்டிலேட்டர்’ ஊழல்!

அகமதாபாத்:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படுகிறது என்று கூறி, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, தனது நண்பருக்குச் சொந்தமான கம்பெனியிலிருந்து போலி வெண்டிலேட்டர்களை வாங்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி பெறாமலும், மருத்துவ சாதன விதிகளை மீறியும் சுமார் 900 போலி வெண்டிலேட்டர்களை குஜராத் அரசு வாங்கியிருப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்றைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் பாஜக ஆளும் குஜராத் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இங்கு 12 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 750 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர்களை ராஜ்கோட்டை சேர்ந்த ஜோதி சிஎன்சி (Jyoti CNC) குழுமம் என்றதனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலாளி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.கடந்த ஏப்ரல் 4 அன்று, முதல்வர் விஜய் ரூபானி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு சில வெண்டிலேட்டர்களை அவர் திறந்து வைத்தார். இந்த வெண்டிலேட்டர்கள், ஜோதி சிஎன்சி குழுமம் நன்கொடையாக வழங்கியவை என்று கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்தே, மாநிலத்துக்கு தேவையான 900 வெண்டிலேட்டர்களையும், தனது நண்பர் பராக்கிரம சிங் ஜடேஜாவுக்குச் சொந்தமான ஜோதி சிஎன்சி நிறுவனத்திடமிருந்தே வாங்குவதற்கு முதல்வர் விஜய் ரூபானி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், “ராஜ்கோட்டை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஜோதி சிஎன்சி வெண்டிலேட்டரான ‘தமன் -1 ’(Dhaman-1)-ஐ மிகக் குறுகிய காலத்தில்வெறும் 10 நாட்களில் உருவாக்கியது.

‘தமன் -1’ உற்பத்தி செலவு ஒன்று இயந்திரத் துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் குறைவு. இந்த மகத்தான சாதனை பிரதமர் திரு நரேந்திரபாய் மோடியின் கனவு பிரச்சாரமான ‘மேக் இன் இந்தியா’வுக்கு ஒருபுதிய மகத்துவத்தை சேர்ப்பதாகும்” என்று பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.மேலும், ராஜ்கோட்டை தளமாகக் கொண்ட உள்ளூர் தொழிலதிபரான பராக்கிரம சிங் ஜடேஜா மற்றும் அவரது ஜோதி சிஎன்சி குழுமம், ‘மேக் இன் இந்தியா, மேக் இன் குஜராத்’ பிரச்சாரத்தின் நோக்கத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன என்று, தனது முதலாளி நண்பர்களையும் அறிக்கையில் குளிர்வித்துள்ளார்.

இந்நிலையில்தான், ராஜ்கோட் நிறுவனம் தயாரித்த வெண்டிலேட்டர் தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஜோதி சிஎன்சி குழுமம், சிவில் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கிய வெண்டிலேட்டர்கள், சரியான முடிவுகளை தெரிவிக்கவில்லை என்றும், அதில் பழுது இருப்பதாகவும் மருத்துவர்களும், சுகாதாரத்துறையினரும் கூறியுள்ளனர்.கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர் களுக்கு சிகிச்சையளிப்பதில், ராஜ்கோட் இயந்திரங்களின் தரமின்மை குறித்து, அகமதாபாத் சிவில் மருத்துவர்கள் முதல்வர் ரூபானிக்கே நேரடியாக புகார்களைத் தெரிவித்து உள்ளனர்.

இந்த கருவி, வெண்டிலேட்டரே அல்ல, இதுஇயந்திரமயமாக்கப்பட்ட ஒரு கருவி என மூத்த மருத்துவ அதிகாரி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஏனைய மருத்துவர்களும் இதே புகாரை எழுப்பியுள்ளனர்.இந்த விவகாரம் குஜராத்தில் பெரும் சர்ச்சையைஏற்படுத்திய நிலையில், “ஆமாம்... நாங்கள் தயாரித்து அளித்திருப்பது, ஒரு முழுமையான வென்டிலேட்டர் அல்ல” என்று வெண்டிலேட்டர் தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளியான பராக்கிரம சிங்கே ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும், “இந்த தகவலை குஜராத் அரசுக்குமுன்கூட்டியே கூறித்தான் 900 வெண்டிலேட்டர் களுக்கான ஆர்டர்களை பெற்றோம்” என்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“வெண்டிலேட்டரில் பல ரகங்கள் உள்ளன; நாங்கள் தயாரித்து அளித்துள்ள தமன் -1 வெண்டிலேட்டர்கள் அவசரத் தேவையை நிவர்த்தி செய்வதாகும். வழக்கமாக பயன்படுத்தப்படும் வெண்டி
லேட்டர்களைக் காட்டிலும், தமன் -1 இல், அதிகஆக்ஸிஜனைக் கொடுக்க வேண்டும். எனவே, எங்கள் தயாரிப்பை வெண்டிலேட்டராகப் பயன் படுத்த முடியாது, தரமான வெண்டிலேட்டரில் நோயாளிகளை வைப்பதற்கு முன்பு இடைக்கால நடவடிக்கையாக எங்களின் வெண்டிலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; அவ்வளவுதான்” என்றும் கூறியுள்ளார்.

இது குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.“இது ஒரு தீவிரமான விஷயமாகும். ஒரு மாநிலமுதல்வர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க பரிந்துரைத்துள்ள முதல்வரின் செயல்குற்றவியல் நடவடிக்கை ஆகும். இது குஜராத் அரசாங்கம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். போலி வெண்டிலேட்டர்களுக்கு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் உரிமம் பெறவில்லை; அத்துடன் இந்த வெண்டிலேட்டர்கள் அதைகண்காணிக்க வேண்டிய நெறிமுறைக் குழுமருத்துவ சாதன விதிகள் 2017-இன் கீழ் உருவாக் கப்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.

இவ்வாறு, குஜராத் போலி வெண்டிலேட்டர் ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போவதைத் தொடர்ந்து, தமான்-1 வெண்டிலேட்டர் கொள்முதலில் முதல்வர் ரூபானிக்கு உடந்தையாக செயல்பட்ட அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் பாண்டே, அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.மாநில அரசின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசே தன்னிச்சையாக இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்துடன் ராஜ்கோட் ஜோதி சிஎன்சி நிறுவனம் உடனான வெண்டிலேட்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றியும் ஆலோசனையில் இறங்கியுள்ளது.

;