கொல்கத்தா;
மக்களவைத் தேர்தலில், தங்களுக்குத்தான் வாக்களித்தார்களா? என்பதை வாக்காளர்களின் விரலை நுகர்ந்து பார்த்து கண்டறியும், புதிய தொழில்நுட்பத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, திங்களன்று நாடு முழுவதுமுள்ள 71 தொகுதிகளில் நடைப்பெற்றது. இதனொரு பகுதியாக, மேற்குவங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றது.அப்போது, வாக்காளர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் புதிய யுத்தியை கையாண்டுள்ளது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தபஜார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில், அக்கட்சியினர் வாசனை திரவியத்தை தெளித்து வைத்திருந்ததாகவும், பின்னர் வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களின் விரலை நுகர்ந்து விரலில் வாசனை வருகிறதா? என சோதனையிட்டதாகவும் அந்த பத்திரிகை செய்து வெளியிட்டுள்ளது.