tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு தாக்கல்

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசியநெடுஞ்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச் சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக ட்ராபிக் ராமசாமி மனுதாக்கல் செய்துள்ளார்.எனவே இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் கூடுதல் விவரங் களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.