உளுந்தூர்பேட்டை, டிச. 3- நீண்ட காலமாக சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்த புத்தனந்தல் அணையை சீரமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டங்க ளின் விளைவாக அணை சீரமைக்கப்பட்டு தற்போது வரத்து வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டுள்ளதால் வாய்க்கால்களில் நீர்வரத்துவங்கியது. உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள புத்தனந்தல் கிரா மத்தில் 1964இல் அப்போதைய முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கருங்கல்லால் கட்டப்பட்டது புத்தனந்தல் அணை. கடந்த 20 ஆண்டுகளாக அணை மற்றும் நீர் வெளி யேறும் வாய்க்கால்கள் முற்றிலுமாக பழுத டைந்து இருந்தன. இந்நிலையில் கடந்த 2018 ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் புத்தனந்தல்அணை பாது காப்புக் குழு சார்பில் அணையை தூர்வாரி பழுது பார்த்தும்; நீர் செல்லும் 16 கிலோ மீட்டர் வரத்து வாய்க்கால்களை புணரமைக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் உரிய துறைகளின் அதிகாரி களுக்கு மனு உள்ளிட்டவை மூலம் கோரிக்கை கள் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் பேரில் 16 கிலோ மீட்டர் வாய்க்கால் முழுமையாக 2018 ஆம் ஆண்டு தூர்வார பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ரூ. 60 லட்சம் செலவில் புத்தனந்தல் அணை தூர்வாரி பராமரிப்பு பணிகளும் மற்றும் மூன்று இடங்களில் கான்கிரீட் சுரங்கப்பாதை களும் புதிதாக அமைக்கப்பட்டன. தற்போது பெய்து வரும் பருவ மழையால் புத்தனந்தல் அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது. அணையிலிருந்து வேகமாக வெளியேறும் நீர் வரத்துகால்வாய்கள் மூல மாக ஆத்தூர் கிராமத்தில் சித்தேரி, பெரிய ஏரி, பிள்ளையார்குப்பம் ஏரி, களமருதூர், பா. கிள்ளனூர், ஒரத்தூர் ஆகிய கிராமங்கள் உள்பட எட்டு கிராமங்களின் ஏரிகளுக்கு செல்கிறது இதனால் இப்பகுதி விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தொடர் போராட்டத்தின் மூலம் கோரிக்கை வென்றெடுக்கப் பட்டுள்ளது.