வேலூர், ஏப்.9-அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார் பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக. ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் சார்பில் நகரச் செயளார் மணிகண்டன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் என்.காசிநாதன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.ரகுபதி, மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சி. மணி, தொகுதி பொறுப்பாளர் தா.வெங்கடேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.ரமேஷ், ஆர்.காளப்பன், ஆறுமுகம், விஷாரம் நகரச் செயலாளர் அல்லாபக்காஷ், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ராணிப் பேட்டை முப்பது வார்டுகளிலும் பிரச்சாரம் நடந்தது.