சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தக் கூடிய சூரிய கிரகண கண்ணாடிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.இதனை மாணவர்கள், பொதுமக்கள் ரூ.20 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ் பங்கேற்று சூரிய கிரகண கண்ணாடிகளையும், “வாங்க சூரிய கிரகணம் பார்க்கலாம்’’ என்ற வழிகாட்டி நூலையும் வெளியிட்டார். அவற்றை சிறைத்துறையின் வேலூர் மண்டல துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, மூத்த வழக்குரைஞர்கள் டி.எம்.விஜயராகவலு, எஸ்.ஞானேஸ்வரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.. சூரிய கிரகண கண்ணாடி முன்பதிவுக்கு மாவட்டத் தலைவர் க.பூபாலனை 9944274858என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.