tamilnadu

img

முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை, டிச. 20- இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறும் முதல மைச்சர், அது பற்றி குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை என்பது கூட  தெரியாமல் பேசுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்  துள்ளார். சென்னை கொளத்தூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மக்களு டன், மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். 1000  பேருக்கு பரிசு பொருட்களும் வழங்  கப்பட்டன.  நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை சமூகத்திற்கு திமுக குரல்கொடுத்து வருகிறது என்று கூறிய அவர், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரும் அதி முகவின் நிலைப்பாடு குறித்தும் பேசினார்.