tamilnadu

img

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட ஸ்டாலின் கோரிக்கை

 சென்னை, அக்.23- தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்ப டுவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் பாது காப்பை, முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம், கொலைக் குற்றங்களின் அச்சத்திலிருந்து மக்களை மீட்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும், மு.க.ஸ்டாலின் கூறி யிருக்கிறார். மேலும், கொலை குற்றங்கள் தொடர்பாக தேசிய  குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைக்கும், சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கும் வேறுபாடு இருப்பதால், அதுகுறித்து, முதலமைச்சர்  வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.