tamilnadu

img

வேலூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு

வேலூர்,ஆக.4- வேலூர் மக்களவை தொகுதிக்கு திங்கட்கிழமை (ஆக.5) காலை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி 1553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 7500 வாக்குச்சாவடி அலு வலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3752 வாக்குப் பதிவு எந்திரங்க ளும், 1876 கட்டுப்பாட்டு அறைகளும், 1876 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் பொருட்கள் அனைத்தும் அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வாக்குப் பதிவு எந்திரங்கள் பலத்த பாது காப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மக்களவைத் தேர்தலில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணை க்கட்டு, கே.வி.குப்பம், குடி யாத்தம் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கி யுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண்கள் வாக்காள ர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேரும் வாக்களிக்க உள்ள னர். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். 

பாதுகாப்புப் பணியில்...

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,600 பேர் கொண்ட 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 4 ஆயிரம் காவல்துறையின ரும், 400 ஊர்க்காவல் படையி னர் பாதுகாப்புப் பணியில் ஈடு படுகின்றனர். 179 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு ள்ளது. அந்த வாக்குச்சாவடி கள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. துணை ராணுவத்தினரும் அங்கு பாதுகாப்பில் ஈடுபடு கின்றனர்.  வாக்குப் பதிவு முடிந்ததும்எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ராணிப்பேட்டை  பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆக. 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது.   சிசிடிவி கேமரா திருடு குடியாத்தம் காந்தி நகரில் அரசு திருமகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டு ள்ள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா திருடு போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் 29,30 மற்றும் 32 ஆகிய  வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளைச் செய்த அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு பூட்டுப்போட்டனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்த்த போது, பள்ளிக் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது, 30ஆவது வாக்குச்சாவடி யின் சிசிடிவி கேமராவும், பள்ளியில் இருந்த 11 கணினிகளும் திருடு போயிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தடய ங்களை சேகரித்து வரும் குடியாத்தம் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.