வேலூர், ஜூன் 3- பெங்களூருவில் இருந்து வேலூருக்கு கடத்திவரப்பட்ட 300 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வா ளர் செந்தில்குமார் தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் சரக்கு வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரி வித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையி னர் வாகனத்தை சோதனையிட்டனர் சோதனையில் காலிப்ளவர் மூட்டை களுக்கு இடையே ஏழு பெட்டிகளில் 300 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அஷமத்துல்லா (33), ஜாபர்கான் (24), ஆசிப் (29), அம்ஜத்கான் (32) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட காய்கறிகள் வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப் பட்டது.