tamilnadu

img

ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா? வாட்ஸ்‍அப் காட்சிகளால் பரபரப்பு

தூத்துக்குடி:
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேதபரிசோதனை வீடியோ என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் பரவி வரும் காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் மீதுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் இந்தவழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. அதில், காயங்களுடன் இருந்த 2 உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடப்பது போன்றும், அதைமாஜிஸ்திரேட் ஒருவர் பார்வையிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும் இறந்தவர்களின் உறவினர் ஒருவர் மாஜிஸ்திரேட்டு காலில் விழுந்து நீதி வழங்குமாறு கூறி கதறி அழுவது போன்றகாட்சிகளும் இடம்பெற்று உள்ளன.இந்த வீடியோ சமூக வலைத்தளங் களில் பரவி பெரும் பரபரப்பை ஏற் படுத்தி வருகிறது.