tamilnadu

img

திரிபுரா மேற்குத் தொகுதியில் மறு தேர்தல் இல்லை

புதுதில்லி:

திரிபுரா மேற்குத் தொகுதி குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:


திரிபுரா மேற்குத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 163 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுதேர்தல் நடத்திட தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அந்தத் தொகுதியில் நடைபெற்ற தேர்த லின்போது வாக்களிக்க வந்த வாக்காளர்கள் ஆளும் பாஜகவினால் தடுக்கப்பட்டதும், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதும் மிகவும் விரிவான அளவில் நடந்திருந்தது.


திரிபுரா மேற்குத் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேலான வர்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப் பட்டுள்ளார்கள். எனவே அங்கே நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்திட உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அமைந்திட வில்லை. அங்கே நடைபெற்றுள்ள வாக்குச் சாவடி மோசடிகளுடன் ஒப்பிடுகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மிகவும் அற்ப அளவினதாகும். அதுமட்டுமல்ல, மிகவும் தாமதமானதும் ஆகும். எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, அங்கிருந்த எதார்த்த நிலையுடன் ஒத்துப்போகவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.


திரிபுரா மேற்குத் தொகுதியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற தேர்தல் மோசடிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அரசியல் கட்சிகளாலும் தனிப்பட்ட நபர்களாலும் எண்ணற்ற முறையீடுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மாதத்திற்கு முன்பே அளிக்கப்பட்ட போதிலும், அவற்றில் மிக அற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டும் மறுதேர்தல் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தலைமைத் தேர்தல்


ஆணையத்தின் இந்த முடிவானது, ஒரு பக்கத்தில், பெரிய அளவில் தேர்தல் மோசடி நடைபெற்றிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், தேர்தல் மோசடிகள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போய்விட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நீதி வழங்கிடும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகச் செய்து விட்டது. திரிபுரா மேற்குத் தொகுதியில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தி, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டுமானால், அத்தொகுதி முழுவதும் மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிடாமல் வேறெந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதனால் எவ்விதப் பயனுமில்லை.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)