திருச்சிராப்பள்ளி, நவ.20- மத்திய –மாநில அரசுகளின் மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் செவ்வாய் அன்று ஸ்ரீரங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மன்னார்புரம் மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. வட்டசெயலாளர் செல்வராசு தலை மை வகித்தார். பிரச்சாரத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கரா ஜன், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொறியாளர் அமைப்பு மாநில துணைபொதுச்செயலாளர் இரு தயராஜ் ஆகியோர் பேசினர்.
ஓய்வூதியர் நல அமைப்பு
பிரச்சாரத்தில் ஓய்வூதியர் நல அமைப்பு வட்ட தலைவர் யு.கிருஷ்ண மூர்த்தி, செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாநகர் மாவட்ட துணைத்தலைவர் வீரமுத்து, ஸ்ரீரங்கம் கோட்ட செயலாளர் சுப்ரமணி, ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் தர்மலிங்கம், நகர கோட்ட தலைவர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்கம், தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் உறையூர் குறத்தெரு பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் அழகப்பன், பக்ரு தீன்பாபு, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலை வர் கணேசன் ஆகியோர் பேசினர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சுப்ரமணியபுரம், ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. போக்குவரத்து கழக சிஐடியு சங்க செயலாளர் அருண் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மணிமாறன், ஜெயராமன், ராஜூ, சங்க மாநிலக்குழு உறுப்பினர் முத்துவேல், சிபிஎம் பொன்மலை பகு திக்குழு செயலாளர் கார்த்திகேயன் ஆகி யோர் பேசினர். தீரன்மா நகர் மற்றும் தீரன் நகர் பகுதிகளில் நடந்த பிரச்சார இயக்கத்திற்கு சீனிவாசன் தலைமை வகித்தார். பிரச் சாரத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், கருணாநிதி, சிவக்குமார், ராமசாமி, கார்த்திகேயன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்டுமானத் தொழிலாளர் சங்கம்
கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்கம் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ரோடு பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு காட்டூர் ஒருங்கி ணைப்பாளர் பாலு தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், பொருளாளர் வி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். காட்டூர் பகுதி சிஐடியு நிர்வாகிகள் பத்மநாபன், சார்லஸ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கம் சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் எதிரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தி ற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து தலை மை வகித்தார். பிரச்சாரத்தில் ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் சங்க செயலாளர் மணிகண் டன், ஸ்ரீரங்கம் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.