tamilnadu

img

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

தரங்கம்பாடி, ஜூன் 4-நாகை மாவட்டம் குத்தாலம்தாலுகா தலைமை மருத்தவமனையின் அவலத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நகர செயலாளர்ராமகுரு தலைமையில் செவ்வாயன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட சேத்திரபாலபுரம், மேக்கரிமங்கலம், திருமணஞ்சேரி, தேரிழந்தூர், திருவாடுதுறை, ஆலவேலி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைப் பெற வந்துசெல்லும் குத்தாலம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்இல்லாமல் குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும் ஸ்கேன் இயந்திரம் இருந்தும் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருப்பதாகவும் அதனை பயன்படுத்துவதோடு, அதற்குரிய தொழில்நுட்ப பணியாளரை நியமிக்க வேண்டும். விபத்து, விஷக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் போதுஉயிருக்கு போராடுபவர்களை அலைக்கழிக்கக் கூடாது. போதுமான மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்விஜயகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 1 மாதத்திற்குள்ளாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.