தஞ்சாவூர்:அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் உள்ள மாணவ, மாணவிகளி டையே விளையாட்டுப் போட்டி கள் மற்றும் கலை நிகழ்ச்சி கள் இரு தினங்கள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளில் திண்டுக்கல், சிவகங்கை, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த 900 குழந்தைகள் கலந்து கொண்டனர். தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை வகித்து பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நா.நடராஜன் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ப.சுதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினரும், குழந்தைகள் நலக்குழு தலைவருமான சி.திலகவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் நிறைவாக நன்றி கூறினார்.