tamilnadu

img

ஓய்வூதியர் சங்க பேராவூரணி வட்ட மாநாடு

தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சஙக முதலாவது வட்ட மாநாடு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. வட்டத்தலைவர் கணே. மாரிமுத்து மாநாட்டிற்கு தலைமை வகித்தார். வட்ட செயற்குழு உறுப்பினர் பட்டாபிராமன் கொடியேற்றி வைத்தார். செயற்குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். வட்ட இணைச் செயலாளர் க. மாணிக்கம் வரவேற்றார். வட்ட துணைத் தலை வர் எஸ்.வீரசிங்கம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வட்டச் செயலாளர் பி.நாகூரான் செயலறிக்கை தாக்கல் செய்தார். வட்டப் பொருளாளர் மா.ஆவிடைக்குட்டி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். வட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தர்ராஜூ தீர்மானம் முன் மொழிந்தார்.  மாவட்ட இணைச் செயலாளர் இரா.அண்ணாதுரை தொடக்கவுரையாற்றினார். தோழமை மற்றும் சங்க நிர்வாகிகள் ஆர். தமிழ்ச்செல்வன், சி.பிச்சைமுத்து, கே.தங்க வேலு, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழா சிரியர் சு.போசு, கோவி.தாமரைச்செல்வன், அ.க.தங்கராசு, விஜயா, ப.கணேசன், ந.சுரேஷ், பட்டாபிராமன், நெய்வாசல் மாரியப்பன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். செயற்குழு உறுப்பி னர்களாக அண்ணாதுரை, பத்மாவதி, எஸ்.ஆர்.பிச்சை, தங்கவேலு, வீராசாமி, ரெத்தி னம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபால் நிறை வுரையாற்றினார். துணைச் செயலாளர் சி.நாக ரெத்தினம் நன்றி கூறினார்.  கூட்டத்தில், ‘காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவையை தொடர்ந்து இயக்க வேண்டும். சென்னை மற்றும் இராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட் டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சோழன் சூப்பர் மார்க்கெட் சார்பில் மாநாட் டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரதி புத்த காலய பிரசுரங்கள் இலவசமாக வழங்கப் பட்டன.