tamilnadu

img

காத்தான்சாவடி- பொறையார் பாலப் பணியை உடனே துவங்குக!

பாதை வசதி இல்லாமல் மக்கள் அவதி 

சிபிஎம் ஆர்ப்பாட்டம்  

தரங்கம்பாடி. நவ.29- மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாவட்டம், பொறையார் பழைய பேருந்து நிறுத் தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பொறையார்- காத்தான்சாவடி பகுதி களை இணைக்கும் உப்பனாற்று பாலத்தை  உடனடியாக கட்டி முடிக்கக் கோரியும், தரங் கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களின் உட்புற சாலைகளை சீரமைக்க கோரியும் நடை பெற்ற போராட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பி னர் காபிரியேல் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ரவிச்சந்திரன், கிளை செயலாளர் செல்வராஜ், வாலிபர் சங்க நிர்வாகிகள் வீ.எம்.சரவணன், பவுல் சத்திய ராஜ் ஆகியோர் உரையாற்றினர். காத்தான்சாவடி- பொறையார் பகுதிக ளை இணைக்கும் உப்பனாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்காக சுமார் 100 ஆண்டு கள் பழமையான பாலத்தை இடித்து விட்டு 2.50 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு மார்ச் -1 அன்று இப்பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். ஆனால் சில வாரங்களிலேயே இப்பணி கிடப்பில் போடப்பட்டது.  இரு பகுதிகளுக்கும் மக்கள் சென்று வர தரமின்றி அமைக்கப்பட்ட தற்காலிக பாலமும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் இரு பகுதியும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பேரூராட்சியின் உட்புற கிராம சாலைக ளும் நடந்துக் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உடனடியாக நடவடிக்கை இல்லையெனில் தொடர்ந்து போராட் டங்களை நடத்துவோம் என தெரிவித்தனர்.