tamilnadu

img

நாளை குடியுரிமை மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மனிதச் சங்கிலி

திருச்சிராப்பள்ளி: திருச்சியில், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்டக்குழு சார்பில் அனைத்து கட்சி மற்றும் வெகுஜன அமைப்பினர் ஆலோசனை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு  உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநகர ஜமாத்துல் உலமாசபை அப்துல்மன்னான், ரஹீம், ஜாஹீர்உசேன், தமுமுக ஜாபர்அலி, இப்ராஹீம், அசரப்அலி, முகமதுராஜா, மஜக அசரப்அலி, சாகுல், சம்சுதீன், ஐயுஎம்எல் அப்துல்பாசீத், முஸ்தபா,  இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் தியாகராஜன், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி(உவைசி) சம்சுதீன், மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு சிராஜூதீன், மனிதநேய ஜனநாயக கட்சி மைதீன், இப்ராஹிம்சா, ஐயுஎம்எல் மாவட்ட செயலாளர் ஹபிப் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, என்ஆர்சி, என்சிஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 30-ந் தேதி திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் காந்தி மார்க்கெட் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது. 2ந் தேதி முதல் 8ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.