tamilnadu

ஜூலை 1 முதல் 7 வரை ஹைட்ரோ கார்பன் திட்டப் பாதிப்பை விளக்கி மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

தஞ்சாவூர், ஜூன் 27- காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின், தஞ்சா வூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை தஞ்சாவூ ரில்  நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், என்.சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செய லாளர் பா.பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீரமோகன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன், விவசாயிகள் கூட்ட மைப்பு கக்கரை சுகுமார், சமவெளி விவசாயிகள் சங்கம் பழனி ராஜன், ஜனநாயக விவசாயிகள் சங்கம் அருணாசலம், தமி ழக விவசாயிகள் சங்கம் துரை.பாஸ்கர், வணிகர் சங்கம் அப்துல் நசீர், தமிழர் தேசிய இயக்கம் சாமி.கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், பாதிப்பை விளக்கியும், ஜூலை 1-ஆம் தேதி முதல் முதல் 7 வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவது. ஜூலை 9 ஆம் தேதி தஞ்சா வூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவல கம் நோக்கி மக்களைத் திரட்டி பேரணி நடத்துவது, வரும் ஜூன் 28-ல் மீண்டும் நிர்வாகிகள் கூடி கலந்தாலோசனை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.