பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 8 மாவட்ட கவுன்சிலர், 76 ஒன்றிய கவுன்சிலர் 121 ஊராட்சி தலைவர், ஆயிரத்து 32 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என ஆயிரத்து 237 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 8 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 7 திமுக கைப்பற்றியது. ஒரு இடம் மட்டுமே அதிமுக பிடித்தது. மேலும் ஆதவனூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக போட்டியிட்ட மணிவேல் (72) என்பவர் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 166 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். வெள்ளி யன்று அதிகாலை உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, பொறையார், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணிக்கும் மேலாக பனி மூட்டம் நிலவியது. இதில் காட்டுச்சேரி- பொறையார் சாலையில் பனி மூட்டம் காரணம் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தோடு சென்றனர்.