மன்னார்குடி, ஜூலை 9- தமிழகத்தில் குளம், ஏரி உள்பட நீர்நிலைகளை புனர மைக்கும் பணியில் சிட்டி யூனியன் வங்கி முக்கிய பங்கேற்றி வருகிறது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததால் மழை பெய்தாலும் தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. இதனால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசு 2014ல் துவங்கிய சமூக மேம்பாட்டு பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் சிட்டி யூனி யன் வங்கி நீர் நிலைகளை புனரமைக்கும் பணியில் ஈடு பட்டு முதல் முறையாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத் தில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணியில் சிட்டி யூனியன் வங்கி தம்மை ஈடுபடுத்தி கொண்டது. 2016 ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவை முன்னிட்டு 6 கோடி ரூபாய் செலவில் சேய்குளம், பிடாரி குளம், பாணாதுறை குளம், பச்சையப்பன் குளம் மற்றும் ஆயிகுளம் உள்ளிட்ட பல குளங்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் பகவத் படித்துறை 20 லட்சம் ரூபாய் செல வில் சிட்டி யூனியன் வங்கி சீரமைத்துள்ளது. காவிரி கரை யை புதுப்பித்து காவிரி புஷ்கரம், மாயூரம் துலா கட்ட சுவர் எழுப்பிட நாகை மாவட்ட ஆட்சியர் மூலம் 50 லட்சம் ரூபாயை சிட்டி யூனியன் வழங்கியுள்ளது. கன்னி யாக்குமரி விவேகானந்தா கேந்திரம் வாயிலாக ராமேஸ் வரம் பகுதியில் உள்ள நீர் நிலைகளை சுத்தப்படுத்த 15 லட்சம் ரூபாய், கோவையில் உள்ள குமரன்குட்டையை சீரமைக்க கோவை ரோட்டரி கிளப், சிறுதுளி அமைப்பின் வாயிலாக ரூபாய் 30 லட்சம் என சிட்டி யூனியன் வங்கி தொடர்ச்சியாக உதவியுள்ளது.
2017-18 ஆண்டுகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளைத் தூர்வார 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாடிசமங்கலம், எடஅன்னவாசல், பருத்திக்கோட்டை மற்றும் மூவநல்லூரில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டன. மேலும் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வரை உள்ள பாமினி ஆற்றை தூர்வாரியதன்பேரில் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 லட்சம் விவசாயிகள் பயன டைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு மேலை யூரில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளிங்கிரி ஏரியை தூர்வார சிட்டி யூனியன் வங்கி உதவியதால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கும்பகோணம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 110 கழிப்பறைகள் 2.50 கோடி ரூபாய் செலவிலும், கும்பகோணம் காவல்துறைக்காக 175 கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்தும், மருத்துவத் துறையின் கீழ் கும்பகோணத்தில் பழமையான காரனேசன்மருத்துவ மனையில் 75 லட்சம் ரூபாய் கூடுதல் கட்டிடங்கள் கட்ட நிதி யும் சிட்டி யூனியன் வங்கி வழங்கியுள்ளது.