tamilnadu

img

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 15 சதவீதம் உயர்வு

சென்னை,அக்.8- கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் நடப்பு ஆண்டில்  இரண்டாவது காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்து ரூ. 193.54 கோடியை எட்டி யுள்ளது. 2019-20-ஆம் நிதி யாண்டின் இரண்டாம் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை அவ்  வங்கியின் நிர்வாக இயக்கு நர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காம கோடி சென்னையில் வெளி யிட்டார். 2019-20-ஆம் நிதியாண் டில் இரண்டாவது காலாண்  டில் வங்கியின் வைப்புத்  தொகை 17 விழுக்காடு  உயர்ந்து, ரூ.40,451 கோடி யாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே  காலக்கட்டத்தில் ரூ.34,534  கோடியாக இருந்தது. இதே போல, வங்கி வழங்கிய கடன் தொகை, 12 விழுக்காடு  வளர்ச்சியடைந்து, ரூ.33,279  கோடியாக அதிகரித்துள் ளது. இது, கடந்த ஆண்டில் ரூ.29,785 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வணி கம் 15 விழுக்காடு  உயர்ந்து ரூ.73,730 கோடியாக உள்ளது. நிகர லாபம் 15 சத வீதம் வளர்ச்சியடைந்து ரூ. 193.54 கோடியாக அதிக ரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் 2.85  சதவீதத்திலிருந்து 3.41 சத வீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராகடனும் 1.90 சத வீதமாக அதிகரித்துள்ளது. முதல் அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 15 சத வீதம் உயர்ந்து ரூ.379.18  கோடியாக அதிகரித்துள் ளது. நாட்டின் பொருளா தாரத்தில் மந்த நிலை இருந்த  போதிலும், சிட்டி யூனியன் வங்கியின் வணிகம் நிலை யாக இருந்தது. நடப்பு நிதி யாண்டின் நான்காவது காலாண்டில் 50 கிளைகள்  புதிதாக திறக்க திட்டமிடப் பட்டுள்ளது  என்றும் காம கோடி கூறினார்.