districts

மயிலாடுதுறை நகராட்சிக்கு குப்பைகள் கட்டும் இயந்திரம் வழங்கிய சிட்டி யூனியன் வங்கி

மன்னார்குடி, மார்ச் 26 - மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ் டிக் குப்பைகள் கட்டுவதற்கான இயந்தி ரம் சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது.  மயிலாடுதுறை நகராட்சி 36 ஆவது வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக ஆனந்த தாண்டவபுரம் சாலையில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட குப்பை கள் மலைபோன்று தேங்கியதால் மேலும் குப்பைகள் கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இப்படி சேரும் பிளாஸ்டிக் குப்பை களை கட்டுகளாக கட்டுவதற்கான பேலிங் இயந்திரம் மயிலாடுதுறை சிட்டி  யூனியன் வங்கி கிளை சார்பில் ரூ.9.5 லட்சம் மதிப்பீட்டில் வாங்கி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்வராஜ், எம்.எல்.ஏ ராஜ்கு மார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிட்டி யூனியன் வங்கி கிளை மே லாளர் மகாதேவன் பேலிங் இயந்தி ரத்தை நகராட்சி ஆணையர் பாலுவி டம் ஒப்படைத்தார். சியூபி துணை மேலா ளர் ராமானுஜம், நகராட்சி டாக்டர் மலர்  மன்னன், கவுன்சிலர்கள் கார்த்தி, விஜய்,  சுகாதார ஆய்வாளர் ராமையன் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.