tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

கூட்டுறவு மேலாண் பட்டயப்  பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சாவூர், ஏப்.10 - தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி நடைபெற வுள்ளது. கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி முடிக்காமல்  கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர் கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்று, மூன்றாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.5.2025 அன்று குறைந் தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சிக்கு அதிகாரபூர்வ இணைய தளமான www.tncu.gov.tn.in மூலம் மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழி காட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பயிற்சிக்கு ஏப்.16 ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டுக்கோட்டை கூட்டு றவு மேலாண் நிலையத்திற்கு அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-ஐ இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 6, பிற்பகல் 5.30 மணி வரை . அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண் ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.  பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மற்றும் பயிற்சி குறித்த  மேலும் விபரங்களுக்கு முதல்வரின் அலைபேசி எண்கள். 9486045666, 9443587759-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உரிய அனுமதியின்றி கனிமங்கள்  ஏற்றி வந்த 10 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூர், ஏப்.10 - தஞ்சை மாவட்டத்தில், உரிய அனுமதியின்றி கனி மங்கள் ஏற்றி வந்த 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தர வின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர்  சீனிவாசராவ் மேற்பார்வையில், புவியியல் மற்றும் சுங்கத் துறை அலுவலர்கள் மாவட்டத்தில் தொடர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது உரிய நடைச்சீட்டு இன்றி கனிமங்கள் ஏற்றி  வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கடந்த ஜன வரி மாதத்தில் மட்டும், திருவோணம் காவல் நிலையத்தில் 4  லாரிகள், தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் 2 லாரி கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில்  1 லாரி, செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 1 லாரி, வல்லம் காவல் நிலையத்தில் 2 லாரிகள் என மொத்தம் 10 லாரிகள் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.  மேலும், இதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4, மார்ச் மாதத்தில் 2 என மொத்தம் 6 லாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளன.  கனிம வளத்துறை சார்பில் தொடர்ந்து வாகன தணிக்கை  மேற்கொள்ளப்படும் எனவும், உரிய நடைச்சீட்டு இன்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்கு நர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.  

செல்போன் பறித்த சிறுவன் உள்பட 4 பேர் கைது

 தஞ்சாவூர், ஏப்.10 -  தஞ்சாவூர் அருகே வல்லம் சவேரியார் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் வினோத் (35). இவர் கடந்த 7 ஆம் தேதி இரவு  11:30 மணியளவில் வல்லம் - ஆலக்குடி சாலை பைபாசில் உள்ள மேம்பாலத்தின் கீழே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நான்கு பேர்  வினோத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர். இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் வல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் முகமது நிவாஸ்  மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டனர். இதில் வினோத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றது தஞ்சாவூர் கீழ ராஜவீதி பகுதியைச் சேர்ந்த  ஷாம் சுந்தர் (20), களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த  பூபதி (18), தஞ்சாவூர் பரிசுத்தம் நகர் பகுதி சேர்ந்த சரண் குமார் (30) மற்றும் வல்லம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஷாம் சுந்தர் உட்பட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  வினோத்தின் செல்போன் மீட்கப்பட்டது. மேலும், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப் பட்டது. இதில் 17 வயது சிறுவன் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

திருச்சிற்றம்பலத்தில்  கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது

தஞ்சாவூர், ஏப்.10 - தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிரா மத்தைச் சேர்ந்தவர் பிரபு (40). இவர் தென்னங்கீற்றுகள் வியா பாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி. இவங களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த ஒருவரது தென்னந்தோப்பில் கூரை வீடு அமைத்து அதில் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்குள் கருத்து  வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக புதன்கிழமை மாலை களத் தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஷாலினி தனது  2 குழந்தைகளுடன் சென்று விட்டார். பிரபு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.   அப்போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து வீட்டி லிருந்த டிவி, மிக்சி, பீரோ, ஆவணங்கள், துணிகள் உள்ளிட்ட  பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தக வலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு  பணி வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக் கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து திருச் சிற்றம்பலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.