திருநெல்வேலி, ஏப்.7-நெல்லை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் நாங்குநேரி மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டார். நம்பிநகர், மறுகால்குறிச்சி, முதலைகுளம், மாயனேரி, தென்னிமலை, இளையார்குளம், பிள்ளைகுளம், பூலம், மருதகுளம், கோவைகுளம், பருத்திப்பாடு உள்ளிட்டபல்வேறு ஊர்களில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.நாங்குநேரியில் வேட்பாளர் ஞானதிரவியம் பேசுகையில், நாங்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். நாங்குநேரி ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக பேருந்துகள் செல்லும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். நாங்குநேரி சிறப்புபொருளாதார மண்டலத்தில் தொய்வில் இருக்கும் பணிகளை துரிதப்படுத்துவேன். அதன்மூலம் அதிகமான தொழில் நிறுவனங்களை அமைத்து வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்கு நிலவும் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காண்பேன் என்றார்.பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர்.நெல்லை டவுன், ராமையன்பட்டி, தச்சநல்லூர், உடையார்பட்டி, சந்திப்புஆகிய பகுதிகளில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர்சா.ஞானதிரவியம் வாக்கு சேகரித்தார்.முன்னதாக டவுனில் திமுக மாநகர் மாவட்டப் பொருளாளர் அருண்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது, தொடர்ந்து தச்சநல்லூரில் முன்னாள் எம்.எல்.ஏ.மாலைராஜா தலைமையில் வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் திமுகமத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப், எம்.எல்.ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், தொமுச மாநில அமைப்பு செயலாளர் அ.தர்மன், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், தனசிங், திமுக டவுன் லெனின், மணிகண்டன், மதிமுகமாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், சிவாஜி மன்றம் பானுசந்தர், கூட்டுறவு பொன்.ஆறுமுகம், வழக்கறிஞர் கந்தசாமி மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.