tamilnadu

img

4 ஆண்டாக வாடகை பாக்கி வங்கி ஏடிஎம் மையத்திற்கு பூட்டு

தரங்கம்பாடி, ஜூன் 7- நாகை மாவட்டம் திருக்கடையூர் சன்னதி வீதியில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் மையம் வாடகையை கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக தராமல் வங்கி நிர்வாகம் ஏமாற்றி வந்த நிலையில் அதிருப்தியடைந்த கட்டட உரிமையாளர் வெள்ளியன்று காலை மையத்திற்கு வந்து ஏடிஎம் மையம் பூட்டப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பேனரை ஷட்டரில் ஒட்டி விட்டு பூட்டி சென்றார். அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருக்கடையூரில் வாடகை தராததால் ஏடிஎம் மையம் பூட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.