tamilnadu

img

ஐபிஎல்... தில்லி அணியின் உரிமையாளராகிறார் கம்பீர்?

தில்லி 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடரின் புதிய நட்சத்திர அணியாக வளரும் தில்லி கேப்பிட்டல்ஸ் அணியின் 10 சதவீத பங்குகளை வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் தில்லி அணியின் உரிமையாளராக ஜி.எம்.ஆர். குரூப், ஜேஎஸ்டபிள்யூ (தலா 50 சதவீதம் பங்குகளுடன்) ஆகிய 2 நிறுவனங்கள் உள்ளன. இதில் ஜிஎம்ஆர் குரூப்பிடமிருந்து 10 சதவீத பங்குகளை (100 கோடி மதிப்பு) கம்பீர் வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்  தில்லி அணி நிர்வாகம் இது தொடர்பாக ஒப்புதல் அளிக்கவில்லை. 2 நிறுவனங்களின் ஒப்புதலுக்கு பின்னரே கம்பீர் தில்லி அணியின் உரிமையாளராக நியமிக்கப்படுவார்.