கும்பகோணம், மே 21- ஆட்டோ இயக்க அனுமதி வழங்க வேண்டும், ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி நகர் அருகில் சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதிற்கு கும்பகோணம் நகர செயலாளர் ஜி.கார்த்தகேயன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பி.பார்த்தசாரதி, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் நகர துணை தலைவர் மகாராஜா நகர பொருளாளர் பாண்டிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.