tamilnadu

img

பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, நவ.1- நகராட்சி கணக்குப் பணி விதிகளில் ஊழியர்கள் பலன டையும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். காலமுறை ஊதி யத்தில் நியமனம் செய்த என்.எம்.ஆர் ஊழியர்களு க்கு பேரூராட்சியில் வழங்கு வது போல் பழைய பென்சன் வழங்க வேண்டும், நகராட்சி யில் அப்பட்டமான அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் ஊழியர்கள் மீதான பணியிட மாறுதல் உள்பட பழிவாங்கும் நடவ டிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்  உயர் அதிகாரிகள் அத்துமீறிய அநாகரிக நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 48 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி நக ராட்சி ஊழியர்கள் வியாழன் மாலை மன்னார்குடி நக ராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்  சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராஜ.கோவிந்தன் தலைமை வகித்தார். வி.குமார் முன் னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சிங்கார.விஜய குமார் கோரிக்கை விளக்கவு ரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா ளர் எஸ்.சுதாகர், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகி ஏ.வி.சுப்பிர மணியன், வருவாய்துறை அலுவலர் சங்க வட்டத் தலை வர் டி.செந்தில், நெடுஞ்சா லைத் துறை சாலை பணியா ளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜே.பொன்முடி, சிஐடியு ஜி.ரெகுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட நிர்வாகி ப.தெட்சிணாமூர்த்தி ஆகி யோர் வாழ்த்துரையாற்றி னார்கள். நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே. சிவசுப்பிரமணியன் ஆர்ப்பா ட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். பொரு ளாளர் டி.எஸ்.கணேசன் நன்றி கூறினார்.